×

மகிழ்ச்சி தரும் செய்தி.! காசநோய்க்கு மருந்து எடுத்துக்கொண்ட நோயாளிகளுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை.!! முதற்கட்ட ஆய்வில் தகவல்

சென்னை: காசநோய்க்கு மருந்து எடுத்துக்கொண்ட நோயாளிகள் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பரவ தொடங்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றுக்கு பல்வேறு  நாடுகள் தடுப்பூசிகள் கண்டுப்பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதுவரை கொரோனாவுக்கு தடுப்பூசி வரவில்லை. பல கொரோனா தடுப்பூசி ஆய்வுகள் தோல்வியடைந்தது. சில ஆய்வுகள் 2-ம் கட்ட பரிசோதனயைில் உள்ளது குறிப்பிடத்தக்கதது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். ஏற்னவே வேறு நோய் தொற்றுகள் இருக்கும் நோயாளிகளுக்கு எவ்வாறு கொரோனா தொற்று ஏற்படுகிறது என்று மருத்துவ நிபுணர்கள் ஆய்வுகள் மேற்கொண்டனர். வேறு என்ன என்ன நோய் தொற்றுகள் இருந்தால் கொரோனா பாதிப்பு ஏற்படும், யாருக்கெல்லாம் பாதிப்பு ஏற்பாடு என்று எல்லாம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் தான் காசநோய்க்காக மருந்து எடுத்துக்கொண்ட நோயாளிகள் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. தமிழகத்தில் காசநோய்க்காக மருந்து எடுத்துக்கொண்ட நோயாளிகள் ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்பட்டவில்லை என்று சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்தது. கொரோனா தொற்றை போன்று இந்தியாவில் காசநோயும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நோயாகும். நாள் ஒன்றுக்கு 1,150 பேரும் வருடத்திற்கு நான்கு லட்சம் பேர் காசநோயால் உயிரிழக்கின்றனர்.  காசநோய் என்பது காற்றில் பரவக்கூடிய கொடிய நோயாகும். இதை தடுக்க தான் பிசிஜி தடுப்பூசிகள் குழந்தை பிறந்த உடனே போடப்படுகின்றது.

இந்தியாவில் 1940-ம் ஆண்டுக்கு பிறகு பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் காசநோய் தடுப்பூசி போடப்படுகின்றது. இந்த தடுப்பூசியை உலகில் இந்நியா போன்ற நாடுகள் முழுமையாக பயன்படுத்துக்கின்றன. பிசிஜி தடுப்பூசியை பயன்படுத்தும் நாடுகளில் கொரோனாவால் ஏற்படும் இறப்பு குறைந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் கிடைத்துள்ளன.  இதனை தொடர்ந்து அமெரிக்கா போன்ற நாடுகள் அது பற்றிய ஆய்வையும் தொடங்கியுள்ளது. காசநோய் என்பது பாக்டீரியாவால் ஏற்படும் நோய் தொற்று ஆகும். காசநோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகள் ஐஜி வகை ஆன்டிபாடிகளை ஏற்படுத்துவதால் அதில் உள்ள ஜி வகை தடுப்பு சக்தி கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதாக முதற்கட்ட ஆய்வுகள் தெரியவந்துள்ளது.

Tags : Tuberculosis, Medication, Corona, Preliminary Study
× RELATED DMK Vs ADMK Vs BJP மக்களவைத் தேர்தலில்...