×

ம.பி.யில் கட்டிட விபத்தில் சிக்கிய 17 வயது சிறுவன் 2 நாட்களுக்கு பிறகு தேசிய மீட்பு படையினரால் மீட்பு : மக்கள் உற்சாகம்..!!!

போபால்:  மத்திய பிரதேசத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த கட்டிட விபத்தில் சிக்கிய 17 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது அங்குள்ளவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் லால் கேட் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 2 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துள்ளானது.

அப்போது கட்டிட குடியிருப்பாளர்கள் பலர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்பட்டது. இதனால் தேசியபேரிடர் மீட்பு படையினர் அங்கு விரைந்தனர். இதனையடுத்து தொடர்ந்து மீட்பு பணியானது நடைபெற்று வந்தது. இந்நிலையில் லால் கேட் பகுதிக்கு அருகே உள்ள கட்டிட இடிபாட்டில் சிக்கி இருந்த 17 வயது சிறுவன் உயிரிடன் மீட்கப்பட்டுள்ளான்.

இதனால் அங்குள்ளவர்கள் மிகுந்த ஆரவாரம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து விபத்து நடைபெற்ற பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து இதுவரை 7 பேர் கட்டிட இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் பலர் உள்ளே சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் இடிபாடுகளில் சிக்கியர்வர்களை மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : building accident ,National Rescue Force ,MP building accident ,NDRF , building accident,old boy trapped,rescued ,NDRF
× RELATED சென்னை மவுலிவாக்கம் கட்டட விபத்து:...