×

இடியும் நிலையில் அரசு கட்டிடம்: அச்சத்தில் குடியிருப்புவாசிகள்

குஜிலியம்பாறை:குஜிலியம்பாறையில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அரசு கட்டிடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால்,  அப்பகுதி குடியிருப்பு மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஆபத்தான கட்டிடத்தை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.குஜிலியம்பாறை பகவதியம்மன் கோவில் சாலையில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இங்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு குஜிலியம்பாறை  ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து அரசு குடோன் கட்டிடம் கட்டப்பட்டது. இதில் ஒரு கட்டிட அறை நூலகத்திற்கு பயன்பாட்டில் இருந்து வந்தது. போதிய பராமரிப்பு இன்றி இருந்ததால், நாளடைவில் கட்டிடங்கள் விரிசல்  விட தொடங்கியது.பின்னர் அங்கிருந்த கிளை நூலகம் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய  நிர்வாக பயன்பாட்டில் இருந்து வந்தது. கட்டிடங்கள் இடிந்தவாறும் பழுந்தடைந்த நிலையில், காணப்பட்டதால் அலுவலக பயன்பாட்டை தவிர்த்தனர்.

இதனால் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இல்லாமல் இக்கட்டிடம் இருந்து வருகிறது.கட்டிடத்திற்கு உள்ளே முட்புதர்கள் மண்டியும்,  பெரிய அளவில் மரங்கள் வளர்ந்து நிற்கிறது. இக்கட்டிடம் எப்போதும் வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.  குஜிலியம்பாறையில் அவ்வப்போது பெய்யும் தொடர் மழையால் கட்டிடம் மேலும் வலுவிழந்து உள்ளதால், இரவு நேரத்தில் இக்கட்டிடம் இடிந்து  விழுந்தால் அசம்பாவித சம்பவம் ஏதும் நடக்க வாய்ப்புள்ளது. ஒரு வித அச்சத்துடன் இக்கட்டிடத்தை ஒட்டியவாறு உள்ள குடியிருப்பு வாசிகள் இருந்து  வருகின்றனர்.எனவே பழுதடைந்த இக்கட்டிடத்தை முற்றிலும் இடித்து அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Government building ,Residents , Government ,building ,thunderstorm,Residents ,fear
× RELATED ஆந்திராவில் ஊருக்குள் புகுந்த 70...