×

உக்ரைன் உருளை நல்ல விளைச்சல்: கொடைக்கானல் விவசாயிகள் மகிழ்ச்சி

கொடைக்கானல்: உருளைக்கிழங்கில் மேட்டுப்பாளையம் ரகம், கோளாறுரகம் என பல ரகங்கள் உள்ளன ஒவ்வொரு ரகத்திற்கெற்ப  உருளைக்கிழங்கில் விளைச்சல் இருக்கும். கொடைக்கானல் மலைப்பகுதியில் பொதுவாக எளிதில் கிடைக்கக்கூடிய மேட்டுப்பாளையம் ரகம் கிழங்கு  வகைகளை அதிகம் பயிரிடப்பட்டு வருகின்றன.
இந்த ரகத்தில் ஓரளவு விளைச்சல் கிடைக்கும். இந்த உருளைக்கிழங்கு ரகம் விதை கிழங்கு எளிதில் கிடைப்பதால் இந்த ரக உருளைக்கிழங்கு அதிக  அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. தற்போது கொடைக்கானல் மலைப்பகுதியில் அதிகளவில் விளைச்சல் கிடைக்க கூடிய உக்ரைன் நாட்டு  உருளைக்கிழங்கு பயிரிடப்பட்டு வருகிறது. இந்த ரக உருளைக்கிழங்கு அதிக அளவில் விளைச்சல் கொடுக்கின்றது. அத்துடன் இந்த ரக உருளைக்கிழங்கு மிக ருசியாகவும் உள்ளது.

அங்கு தற்போது கிலோ ஒன்றிற்கு 45 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விலை போகிறது.  ஒரு சிப்பம் உருளைக்கிழங்கு ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். குறிப்பாக உக்ரைன்  நாட்டு உருளைக்கிழங்கு ரகமான ரோஸ்மேரி என்றழைக்கப்படும் ரோஸ் நிற உருளைக்கிழங்கு கொடைக்கானல் மலைப்பகுதியில் பரவலாக  பயிரிடப்பட்டு தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது .அதிக அளவிலான விளைச்சல் இந்த ரக உருளைக்கிழங்கு  தருவதாலும், நல்ல விலை கிடைப்பதாலும் உருளைக்கிழங்கு பயிரிட்டு அறுவடை  செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



Tags : Ukrainian ,Kodaikanal , Good, yield ,Ukrainian, potatoes, Kodaikanal ,farmers, happy
× RELATED ரஷ்யாவில் வாக்குச்சீட்டில் ‘போர்...