×

தொடர் மழையால் கொடைக்கானல் ஏரி நிரம்பியது

கொடைக்கானல்: கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், நகரில் உள்ள ஏரி நிரம்பி வழிகிறது. பழனி  நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பியதால் நேற்று மதகு திறக்கப்பட்டது.

 இந்நிலையில், ஏரியில் உள்ள  நீர்த்தாவரங்கள், களைகள் திறக்கப்பட்ட நீரில் அடித்துச் செல்லும்படி நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். இதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு  தெரிவித்துள்ளனர். குடிநீருக்கு பயன்படுத்தும் தண்ணீரில் களைகளையும், நீர்த்தாவரங்களையும் அப்புறப்படுத்தியதை கண்டித்துள்ளனர்.


Tags : Kodaikanal Lake , Kodaikanal ,Lake ,flooded , continuous, rains
× RELATED கொடைக்கானல் ஏரியில் படகு ஓட்டுனர்களுக்கு உயிர் காக்கும் பயிற்சி