×

தேவர்சோலை பகுதியில் பூத்து குலுங்கும் ‘செர்ரி’ மலர்கள்

ஊட்டி:  ஜப்பான் நாட்டின் தேசிய மலரான ‘செர்ரி’ மரங்கள் நீலகிரி மாவட்டத்தில் அதிகளவு காணப்படுகிறது. குளிர் அதிகமாக நிலவும் இடங்கள்,  சதுப்பு நிலங்கள் மற்றும் நீரோடைகளின் அருகே இந்த மரங்கள் அதிகளவு காணப்படுகின்றன. அக்டோபர் மாதங்களில்தான் செர்சி மலர்கள் பூக்கும். தொடர்ந்து பனிக்காலமான நான்கு மாதங்கள் இந்த மலர்களை காண முடியும். ஆனால், இந்த  ஆண்டு மழை குறைந்து எந்நேரமும் சாரல் மற்றும் காற்று வீசி வருவதால், குளிரான காலநிலை நிலவுகிறது.

மாவட்டத்தில் பல இடங்களில்  தற்போது செர்ரி மலர்கள் பூத்து குலுங்குகிறது. ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பல்வேறு பகுதிகளிலும் இந்த மரங்கள் காணப்படுகிறது. தற்போது  தேவர்சோலை, கைகாட்டி போன்ற பகுதிகளில் அதிகளவு பூத்துள்ளன. இளம் சிவப்பு நிறுத்தில் மரம் முழுவதும் இலைகள் ஏதும் இன்றி பூக்கள்  மட்டுமே காணப்படுகிறது. இதனை உள்ளூர் மக்கள் தற்போது கண்டு ரசித்து செல்கின்றனர்.

Tags : area ,Cherry ,Thevarcholai , Thevarcholai, Blooming ,‘cherry’, flowers
× RELATED குஜராத் ராஜ்கோட் பகுதியில் வணிக வளாக...