×

குன்னூர் டால்பின் நோஸ் பகுதியில் தேயிலை தோட்ட மலை மீது சாலை அமைத்து மரம் கடத்தல்

குன்னூர்:  குன்னூர் டால்பின் நோஸ் அருகே வனப்பகுதியை ஒட்டி   தேயிலை தோட்ட மலைமீது சாலை அமைத்து மரம் கடத்தும் சம்பவம் நடந்து  வருகிறது. குன்னூர் வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் காப்புக்காடுகள் அதிகமாக உள்ளன. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அடர்ந்த வனப்பகுதியை  ஒட்டியுள்ள தேயிலை தோட்டங்களை அழித்து அங்கு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசியல்வாதிகள் மற்றும் பணம்  படைத்தவர்கள் நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தோட்டங்களை வாங்கி விவசாயம் என்ற பெயரில் அவற்றை அழித்து கட்டுமான பணிகளில் ஈடுபட்டு  வருகின்றனர். அதற்காக பல கிலோ மீட்டர் தொலைவு வரை இரவு நேரங்களில் மலையை குடைந்து சாலை அமைத்து வருகின்றனர். கொரோனா  ஊரடங்கு காலத்தில் இந்த சாலையை பயண்படுத்தி பணம் சம்பாதிக்க சிலர் பட்டியலின மரங்களை வெட்டி கடத்தி வருகின்றனர். குன்னூர் மற்றும்  கோத்தகிரி ஆகிய பகுதிகளில் இது வரை இரண்டிற்கும் மேற்பட்ட இடங்களில் பட்டியலின மரங்களை வெட்டி கடத்தி வனத்துறையினரிடம்  சிக்கியுள்ளனர்.  

குன்னூர் அருகே உள்ள டால்பின் நோஸ் காட்சி முனை பகுதி அடர்ந்த காப்பு காடுகளை கொண்ட பகுதியாகும். இந்த பகுதியில்  வனத்துறையினர்  தினந்தோறும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் இங்குள்ள தேயிலை தோட்டத்தின் நடுவே நீண்ட தொலைவிற்கு சாலை  அமைத்து வரும் சம்பவம் வன ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வன ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘டால்பின்  நோஸ் வனப்பகுதியில் பட்டியலின மரங்களான ஈட்டி மரங்கள் அதிகளவில் உள்ளன. இங்குள்ள தனியார் தேயிலை எஸ்டேட் உரிமையாளர்கள் நீண்ட  தொலைவிற்கு தோட்டத்திற்கு நடுவே சாலையை அமைத்துள்ளனர். இரவு நேரங்களில் ஈட்டி மரங்களை வெட்டி கடத்தி வருவதாக கூறப்படுகிறது.  மேலும் இதுபோன்ற வனப்பகுதி அருகே சாலை அமைப்பதற்கு அதிகாரிகள் எவ்வாறு அனுமதியளித்து வருகின்றனர்? என்பது தெரியவில்லை.டால்பின்  நோஸ் மற்றும் லேம்ஸ்ராக் பகுதி வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளது.

இங்கு வனத்துறையினர் தினந்தோறும் கண்காணிப்பில் ஈடுபட்டு  வருகின்றனர். இருப்பினும் இதுபோன்று சாலை அமைப்பது குறித்து கண்டுகொள்வதில்லை. ஊரடங்கை பயன்படுத்தி சிலர் இதுபோன்ற செயல்களில்  ஈடுபட்டுள்ளனர். எனவே மாவட்ட வன அலுவலர் இங்கு ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : tea plantation hill ,road ,area ,Nose ,smuggling , Coonoor, Dolphin ,Area, tea ,hill
× RELATED ரூ.1.52 கோடி மதிப்பீட்டில் பராமரிப்பு புதுப்பொலிவு பெற்ற கரிசல்குளம் சாலை