×

மானாமதுரை அருகே நாட்டுப்புற கலைகள் குறித்த பயிற்சி: வீடுகளில் வீணாக நேரத்தை கழிப்போரை ஈர்க்கும் கலைஞர்கள்...!!!

சிவகங்கை:  கொரோனா விடுமுறையில் குழந்தைகள் தொலைக்காட்சி, செல்போன் மற்றும் கணினி விளையாட்டுகளில் மூழ்குவதை தடுக்க சிவகங்கையில் நாட்டுப்புற கலைஞர்கள் மேற்கொண்டுள்ள புதிய முயற்சி மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இது தமிழர் பாரம்பரிய கலைகளுக்கு புத்துயிர் ஊட்டும் வகையிலும் அமைந்துள்ளதாக அவர்கள் பாராட்டியுள்ளனர். கொரோனா அச்சுறுத்ததால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இந்நிலையில் வீடுகளில் இருக்கும் அவர்கள் விளையாட்டு, பொதுப்போக்கு என்று செல்போன், தொலைக்காட்சி மற்றும் கணினியில் வீணாக நேரத்தை கழிக்கின்றனர். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சிவகங்கை மாவட்டம் கழுகேர் கோட்டை கிராமத்தை சேர்ந்த தப்பாட்ட கலைஞர் பாக்கியராஜ், ஆர்வமுள்ள மாணவர்களை அழைத்து, நாட்டுப்புற கலைகளை பயிற்றுவித்து வருகிறார்.

இதனையடுத்து தப்பாட்டம் மட்டுமின்றி, ஒயிலாட்டம், கரகாட்டம், பறை இசை என்று பல விதத்தில் அசத்தும் அவரிடம் மாணவர்கள் மட்டுமின்றி, மாணவிகளும் அதிகளவில் சென்று பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த செயல் அழிந்து வரும் நாட்டுப்புற கலைகளுக்கு புத்துயிர் ஊட்டுவதைப்போல தனது முயற்சி அமைந்துள்ளதாக பாக்கியராஜ் பெருமிதம் அடைகிறார். மேலும் அவரிடம் பயிலும் மாணவர்களும் தங்களுக்கு புத்துணர்ச்சி கிடைப்பதாகவும், சமூக மனப்பான்மை கிடைப்பதாகவும் கூறுகின்றனர். பாக்கியராஜை போல ஊருக்கு ஒருவர் இருந்தால், தமிழர் பாரம்பரிய கலைகள் புத்துயிர் பெற்று காலம் காலமாக மண்ணின் பெருமையை பறைசாற்றும் என்பதில் சிறிதும் மாற்றமில்லை. மேலும் அதற்கான உரிய ஊக்கத்தை அரசு கொடுத்தால், மிகவும் பேருதவியாக அமையும் என்பது தன்னார்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.

Tags : Artists ,Manamadurai ,home , Training , folk arts , Manamadurai, attract people who spend time, home
× RELATED மானாமதுரை ரயில்நிலையத்தில் மீண்டும்...