×

சென்னையில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் மீண்டும் 88% ஆக உயர்வு : குறைந்தபட்சமாக ஆலந்தூர், சோழிங்கநல்லூரில் 83% மட்டுமே!!

சென்னை :  சென்னையில் கொரோனாவால் 1,30,564 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 1,14,448 பேர் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், 2,666 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி, சென்னை குணமடைந்தவர்கள் சதவீதம் 88% ஆக அதிகரித்துள்ள நிலையில், சிகிச்சை பெறுவோர் சதவீதம் 10% மட்டுமே. கொரோனாவால் இறப்போர் விகிதம் 2.04% மட்டுமே. சென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13,450 ஆக குறைந்துள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஆகஸ்ட் 28 )வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

மண்டலங்கள் மற்றும் குணமடைந்தவர்கள் விவரம்!!

1    திருவொற்றியூர்     3944    
2     மணலி     1901  
3     மாதவரம்     4014
4     தண்டையார்பேட்டை   10118  
5     ராயபுரம்     11,995    
6     திருவிக நகர்     8766   
7     அம்பத்தூர்     7791     
8     அண்ணா நகர்     13,090    
9     தேனாம்பேட்டை     11,603
10     கோடம்பாக்கம்     13,120    
11     வளசரவாக்கம்     6997   
12     ஆலந்தூர்     3941
13     அடையாறு     8559    
14     பெருங்குடி    3554    
15     சோழிங்கநல்லூர்     2983   
16     இதர மாவட்டம்     2072   

மண்டலங்கள் மற்றும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை

1   திருவொற்றியூர்          242
2     மணலி      156
3     மாதவரம்     572
4     தண்டையார்பேட்டை     993
5     ராயபுரம்        881
6     திருவிக நகர்     1041
7     அம்பத்தூர்          1185
8     அண்ணா நகர்     1512
9     தேனாம்பேட்டை 894
10     கோடம்பாக்கம்     1566
11     வளசரவாக்கம்    1003
12     ஆலந்தூர்          706
13     அடையாறு     1287
14     பெருங்குடி    543
15     சோழிங்கநல்லூர்     573
16     இதர மாவட்டம்    296

Tags : recovery ,Alandur ,Cholinganallur ,Chennai ,Corona , Healing rate rises from Corona to 88% again in Chennai: at least 83% in Alandur and Cholinganallur !!
× RELATED ஏழைகளின் சின்னம் ‘மைக்’கா? நாதக வேட்பாளரை கலாய்த்த பெண்கள்