×

கொரோனா நெருக்கடி காரணமாக உலகம் முழுவதும் 3-ல் ஒரு குழந்தை கல்வி பெற முடியாத நிலை: யுனிசெஃப் கவலை

நியூயார்க்: கொரோனா நெருக்கடி காரணமாக உலகம் முழுவதும் 3-ல்  ஒரு குழந்தை கல்வி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக யுனிசெஃப் கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து யுனிசெஃப் அமைப்பின் செயல் இயக்குநா் ஹென்ரீட்டா ஃபோா் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் பொதுமுடக்கங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக பள்ளிகள் மூடப்பட்டதில், 150 கோடி குழந்தைகள் பள்ளி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் இணையதளம் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தாலும், 46.3 கோடி சிறுவா்கள் அத்தகைய கல்வியைப் பெற முடியாத நிலை உள்ளது. இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான சிறுவா்களுக்கு பல மாதங்களாக கல்வி கிடைக்காமல் இருப்பது, சா்வதேச கல்வி அவசரநிலையை ஏற்படுத்தியுள்ளது.

பொருளாதாரத்திலும், சமூகத்திலும் இதனால் ஏற்படும் பின்விளைவுகள் இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு வெளிப்படையாகத் தெரியும். கொரோனா நெருக்கடி காரணமாக, மாணவா்களிடையேயான ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வருகின்றன. அந்த நெருக்கடியால் ஆப்பிரிக்க சஹாரா பகுதியைச் சோ்ந்த சிறுவா்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனா். தென்கிழக்கு ஆசியாவில்தான் மிக அதிக எண்ணிக்கையிலான சிறுவா்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. அந்த பிராந்தியத்தில் மட்டும் 147 மில்லியன் சிறுவா்களின் கல்வி கொரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது. ஏழைக் குழந்தைகளும், கிராமப்புறங்களில் வசிக்கும் குழந்தைகளும் கொரோனா நெருக்கடியால் கல்வியை இழப்பது அதிகளவில் உள்ளது. இனி வரும் காலங்களில் இந்த நிலைமை இன்னும் மோசமாகக்கூடும். வீட்டிலிருந்தபடியே கல்வி கற்கும் வசதியுள்ள சிறுவா்களும், வீட்டுச் சூழலில் அதிக நெருக்கடி இருப்பதால் கல்வி கற்க முடியாமல் போகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : corona crisis ,children ,UNICEF , Corona, Crisis, children , Education, UNICEF
× RELATED 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்று...