×

தமிழ்நாட்டில் மூடுவிழா காணும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள்!: தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வே காரணம்..!!

சென்னை: தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கும் தகுதி தேர்வு கட்டாயத்தால் தமிழ்நாட்டில் ஆண்டுக்கு ஆண்டு ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடப்படுவது அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 2015ம் ஆண்டில் 478 பள்ளிகளும், 2017ல் 360 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும் மூடுவிழா கண்டுள்ளன. தனியார் மட்டுமின்றி அரசு பயிற்சி நிறுவனங்களும் இதில் அடங்கும். இதற்கு 30 சதவீதத்திற்கும் குறைவான மாணவர் சேர்க்கையை கொண்ட பயிற்சி நிறுவனங்களை மூட வேண்டும் என்று தேசிய ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் பிறப்பித்த உத்தரவே காரணமாகும்.

இதனால் இந்த ஆண்டில் தமிழ்நாட்டில் வெறும் 62 அரசு மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதுகுறித்து கல்வியாளர் ஒருவர் தெரிவித்ததாவது, பள்ளி கல்வி என்பது இன்றளவில் மிக அடிப்படையானது. இங்கு என்னெற்ற ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். புதிய கல்வி கொள்கையில் இந்த ஆசிரியர்களின் பங்களிப்பு இன்றையமையாதது. அதனால் இத்தகைய பயிற்சி நிறுவனங்களை மூட உத்தரவிட கூடாது.

இது பல்வேறு மாணவர்களை பாதிக்கும் என்று குறிப்பிட்டார். ஆசிரியர்கள் பயிற்சி பள்ளிகளில் சேர்ந்து படிக்க 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. இதனால் கிராமப்புறங்களில் 12ம் வகுப்பு முடிக்கும் மாணவர்களில், மாணவிகள் அதிகளவில் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் சேர்ந்து பயின்றனர். இந்த நிலையில் தான் படித்து முடித்துவிட்டு வேலையில் சேர தகுதி தேர்வு கட்டாயமானது. அதனால் கடந்த சில ஆண்டுகளாகவே மாணவர்களிடம் ஆசிரியர் பயிற்சிக்கான நாட்டம் குறைந்துகொண்டே வருவது தெரியவந்துள்ளது.

Tags : Teacher Training Schools Closing Ceremony ,Primary School Teachers ,Tamil Nadu ,TamilNadu Teacher Training Schools ,Closd , Teacher Training Schools,TamilNadu,Eligibility test for primary school
× RELATED தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முப்பெரும் விழா