×

ஸ்டான்லி மருத்துவமனையில் மோசமான நிலையில் கொரோனா வார்டு: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

சென்னை: ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டு மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக ஒரு பெண் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்னையில் 5 முக்கிய மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஸ்டான்லி மருத்துவமனையும் ஒன்று. இந்நிலையில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டு மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக ஒரு பெண் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் அந்த பெண் பேசியதாவது:  

என் பெயர் சோபியா. கொரோனா டெஸ்ட்டுக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு வந்து இருந்தேன். கோவிட் பாசிட்டிவ் என்று சொல்லி விட்டு 6வது மாடியில் சேர்த்து உள்ளனர். வார்டு மிகவும் மோசமாக உள்ளது. நோயாளிகள் உள்ளனர். ஆனால் சுத்தமாக இல்லை. ஏற்கனவே மூச்சு திணறுகிறது. ஒன்றும் முடியவில்லை. இந்நிலையில் எங்களை இங்கு வந்து சேர்த்துள்ளார்கள். மருத்துவமனை எப்படி உள்ளது என்று காட்டுகிறேன். நீங்கள் பாருங்கள். இவ்வாறு அந்த வீடியோவில் அந்த பெண் பேசியுள்ளார். மேலும் கொரோனா வார்டு என்று காட்டப்படும் அந்த வீடியோ அங்குள்ள படுக்கைகள் அனைத்தும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. குறிப்பாக படுக்கைகள் அனைத்தும் கிழிந்துள்ளது. இந்த படுக்கைகள் மீது நாற்காலிகளை வைத்துள்ளனர். குப்பைகள் வார்டு உள்ளே தரையில் கொட்டி வைக்கப்பட்டுள்ளது.


Tags : ward ,Corona , Stanley Hospital, bad condition, corona ward, on social websites, video viral
× RELATED திமுக நிர்வாகி மீது பாமகவினர் தாக்குதல் போலீசார் தடியடி