வீடியோவில் பதிவிட்டு செவிலியர் தற்கொலை

சென்னை: பெரவள்ளூர் பெரியார் நகர் 17வது தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது தாய் கவுசல்யா (75) என்பவருக்கு உடல்நிலை சரியில்லாததால் வீட்டில் தங்கி இவரை பராமரிக்க மேல்மருவத்தூரை சேர்ந்த நர்ஸ் ஜோதிகா (22) என்பவரை ஆறுமுகம் நியமித்தார். இவர், கடந்த ஒரு வருடமாக கவுசல்யாவை பராமரித்து வந்தார். இந்நிலையில், நேற்று வீட்டில் நர்ஸ் ஜோதிகா தூக்கில் தொங்கினார். தகவலறிந்து வந்த போலீசார், ஜோதிகாவின் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். நர்ஸ் ஜோதிகா தற்கொலை செய்வதற்கு முன்பு, தனது செல்போனை அருகில் வைத்து, வீடியோ பதிவு செய்தது தெரியவந்தது. அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

தற்கொலை முயற்சி: சூளைமேடு எம்எம்டிஏ காலனி 2வது தெருவை சேர்ந்தவர் முருகன். இவர், கடந்த 5 ஆண்டுகளாக தனலட்சுமி (21) என்பவரை காதலித்து கடந்த 4 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். தனலட்சுமி தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வந்தார். தம்பதி இடையே நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டதால், மனமுடைந்த தனலட்சுமி வீட்டில் இருந்த மூட்டைபூச்சி மருந்தை சாப்பிட்டு மயங்கினார். அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

* சிந்தாதிரிப்பேட்டையை  சேர்ந்த தனலட்சுமி (21), ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில்  வேலை செய்து வருகிறார். கொரோனா அச்சம் காரணமாக இவர் வேலைக்கு செல்லவில்லை என பெற்றோர் கண்டித்ததால்  ரத்த  அழுத்த மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிசிக்சை பெற்று வருகிறார்.

Related Stories:

>