×

2024ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்புகள்: கலெக்டர் மகேஸ்வரி தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் ஜல்ஜீவன் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் க.லோகநாயகி, மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் கே.வி.ஜி. உமா மகேஸ்வரி, மாவட்ட ஊராட்சி குழு துணை பெருந்தலைவர் டி.தேசிங்கு, ஒன்றிய குழு பெருந்தலைவர்கள் பூவை எம்.ஜெயக்குமார், ஜெ.ஜெயசீலி ஜெயபாலன், ரவி, தங்கமணி திருமால், கிரிஜா, ராஜாத்தி செல்வசேகரன், ஒன்றிய குழு துணைபெருந் தலைவர்கள் மாலதி குணசேகரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் பேசும்போது, ‘‘திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் இருக்கும் அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் இணைப்பினை அடுத்த 5 ஆண்டுகளில் ஏற்படுத்தி கொடுக்கும் பொருட்டு மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் ஜல்ஜீவன் இயக்கம் என்ற புதிய திட்டத்தினை துவக்கியுள்ளது. ஊரக பகுதிகளில் கிராமப்புற மக்களுக்கு ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 55 லிட்டர் அளவுக்கு குறையாமல் குடிநீர் வழங்கும் பொருட்டு, ஒவ்வொரு வீட்டிற்கும் வீட்டு குடிநீர் குழாய் இணைப்பினை 2024 - ம் ஆண்டுக்குள் அமைத்து தருவது தான் இத்திட்டத்தின் நோக்கமாகும்’’ என்றார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஊராட்சிக் குழு பெருந்தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, சாலைகளை மேம்படுத்த மாநில அரசு 2019 - 20ம் நிதியாண்டிற்கு ரூ.1800 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியினை பேக்கேஜ் டெண்டர்கள் மூலம் ஏலம் விடப்படுவதால், தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளின் அதிகாரத்தை பறிப்பதாக உள்ளது. உள்ளாட்சி பிரதிநிதிகளின் அதிகாரங்கள் பறிப்பதை கைவிட வேண்டும். இதேபோல் தொடர்ந்து நடைபெற்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Tags : households , By 2024, all housing, drinking water connections, Collector Maheshwari information
× RELATED ஏப்.3 முதல் தீவிர பிரசாரம் 8 கோடி...