×

4 கடைகளை உடைத்து பணம் கொள்ளை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே தச்சூர் கூட்டு சாலையில் காய்கறி, டீக்கடை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு பஞ்செட்டி, நத்தம் பகுதியை சேர்ந்த ஜனார்த்தனன் (43), ராஜேந்திரன் (35) ஆகிய இருவரும் மளிகை மற்றும் சலூன் கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு  கடைகளை பூட்டிவிட்டு வியாபாரிகள் வீடு திரும்பினர். பின்னர் நேற்று காலை ஜனார்த்தனன், ராஜேந்திரன் ஆகிய இருவரும் கடையை திறக்க வந்தனர். அவர்களது கடைகளின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருந்தது.

இதை பார்த்து அதிர்ச்சியான இருவரும் உள்ளே சென்று பார்த்தனர். ஜனார்த்தனின் மளிகை கடை பூட்டை உடைத்து நேற்றுமுன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் புகுந்து வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் ரூ.5 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதேபோல் ராஜேந்திரன் சலூன் கடை உள்பட 2 அடகு கடைகளிலும் கொள்ளை முயற்சியில் மர்ம நபர்களுக்கு பணம், நகை எதுவும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இப்புகாரின்பேரில் கவரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : shops , 4 shop, broken, money robbery
× RELATED திருமணம் செய்வதாக கூறி கடலூர் பெண் அதிகாரியிடம் நகை, பணம் பறித்தவர் கைது