×

பாதாள சாக்கடை பணிகள்: பேரூராட்சிகளின் இயக்குனர் ஆய்வு

திருப்போரூர்: திருப்போரூர் பேரூராட்சியில் ரூ.50 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் கடந்த 1 ஆண்டாக, நடந்து வருகின்றன. இப்பணிகள் தரம் குறைவாகவும், மந்தகதியிலும் நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் திருப்போரூர் பேரூராட்சியில் நடக்கும் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து பேரூராட்சிகளின் இயக்குனர் பழனிச்சாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, காலவாக்கம் மற்றும் மீன் மார்க்கெட் பகுதிகளில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு மைய பணிகள், குழாய்கள் புதைப்பு பணிகள் ஆகியவற்றை அவர் பார்வையிட்டு, பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்குமாறு உத்தரவிட்டார். ஆய்வின்போது பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் (பொறுப்பு) சங்கர், திருப்போரூர் பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) குணசேகரன் உள்பட பலர் இருந்தனர்.

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் பேரூராட்சிகள் இயக்குனர் பழனிச்சாமி, கொரோனா தடுப்பு பணிகள், சுகாதாரத்துறை மற்றும் பேரூராட்சி சார்பில் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை முகாம் குறித்து அதிகாரிகளுடன் சென்று நேற்று ஆய்வு செய்தார். அப்போது, கொரோனா சுகாதார பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டார். மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் அமைந்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் ஆய்வு செய்தார். அப்போது, 1,200 இணைப்பு கொடுக்க வேண்டிய நிலையில், தற்போது 400 இணைப்பு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை இணைப்பை மேலும் அதிகரிக்க அனைவருக்கும் நோட்டீஸ் வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Tags : municipalities ,Director inspection , Sewer, works, municipality, director inspection
× RELATED பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு பேரூராட்சியில் தண்ணீர் பந்தல் திறப்பு