×

மொகரம் ஊர்வலத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி மறுப்பு

புதுடெல்லி: ஊரடங்கு காரணமாக மொகரம் ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் வழிபாட்டு தலங்களில் வழிபாடுகள் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிறிய வழிபாட்டு தலங்களில் மட்டுமே, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. இதனால், எல்லா மதத்தினரின் முக்கிய பண்டிகைகளும் களையிழந்து காணப்படுகிறது.
இஸ்லாமியர்களின் பண்டிகைகளில் ஒன்றான மொகரம் பண்டிகைக்கு ஊர்வலம் நடத்தப்படுவது வழக்கம். தற்போது, ஊரடங்கு அமலில் இருப்பதால் இதற்கு தடை நீடிக்கிறது. இருப்பினும், இந்த ஊர்வலத்தை நடத்த அனுமதி கேட்டு உபியை சேர்ந்த மனு ஜாவத் என்பவர் மேல்முறையீடு செய்தார். இதை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வு, ‘கொரோனா பரவல் அபாயம் இருப்பதால், ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்க முடியாது. ’ என்று அனுமதி மறுத்தது.

Tags : Supreme Court ,Mogaram ,procession , Mogaram procession, Supreme Court, denial of permission
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...