×

தனிநபர்கள், நிறுவனங்களுக்கு அபராதம் 1.83 கோடி வசூலாகி உள்ளது: கூடுதல் தலைமை செயலாளர் தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சி 6, 9, 12, 14 மற்றும் 15 ஆகிய மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நகராட்சி நிர்வாகம் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் தலைமையில்  நடைபெற்றது. கூட்டத்தில்அவர் கூறியதாவது: பொதுமக்கள் ஆங்காங்கே முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும், தங்கள் தேவைகளுக்காக வெளியே வருகின்றனர். எனவே, அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், வங்கிகள், கடைகள் மற்றும் மார்க்கெட் பகுதிகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் முகக்கவசம் அணியாத தனிநபர்கள் மீதும், சமூக இடைவெளியை பின்பற்றாமல் பொதுமக்கள் உள்ள இடங்களில் வியாபாரம் மேற்கொள்ளும் நிறுவனங்கள் மீதும் அபராதத்துடன் கூடிய சட்ட நடவடிக்கையும் அந்த நிறுவனங்களை மூடி சீல் வைக்க வேண்டும். அந்த வகையில் இதுவரை 349 கடைக்களுக்கு இதுவரை சீல் வைக்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்களில் பணிபுரிய சென்னைக்கு வரும் நபர்கள் மற்றும் இ-பாஸ் பெற்று வரும் நபர்களையும் கண்காணித்து தனிமைப்படுத்த வேண்டும். ஏப்ரல் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 26ம் தேதி  வரை ₹1,83 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Tags : individuals ,companies , Individuals, Company, Penalties, 1.83 crore collection, Additional Chief Secretary, Information
× RELATED ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு!