×

அரசு பி.எட். கல்லூரிகளில் விதிமீறி பேராசிரியர்கள் நியமனமா?: கல்லூரி இணையதளங்களில் முரண்பட்ட தகவலால் சர்ச்சை..!!

சென்னை: தமிழ்நாட்டில் அரசு பி.எட். கல்லூரிகளில் விதிகளை மீறி பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசு கல்லூரிகளின் இணையதளத்தில் பேராசிரியர்கள் தகுதி குறித்து முரண்பாடுகளான தகவல்கள் இருப்பதால் சர்ச்சை எழுந்துள்ளது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரிய வேண்டிய ஆசிரியர்கள் கல்வியியல் கல்லூரிகளில் நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆகவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுபற்றி கல்வியாளர் ஒருவர் தெரிவித்ததாவது, பி.எட். கல்லூரிகளில் ஆசிரியராக பணியாற்ற எம்.எட். மட்டுமின்றி நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில் பி.எச்.டி. படிப்பையும் முடித்திருக்க வேண்டும்.

அவ்வாறு இருந்தால் மட்டுமே ஆசிரியராக பி.எட். கல்லூரிகளில் பணியாற்ற முடியும். ஆனால் தற்போது கலை அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வந்தவர்கள் எம்.எட். படிப்பை மட்டுமே வைத்துக்கொண்டு பி.எட். கல்லூரிகளில் விதிகளை மீறி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் பல்வேறு முறைகேடு நடந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். ஆனால் கல்லூரி கல்வி இயக்ககமோ, உயர்மட்ட குழுவின் நிபந்தனைகளுக்கு உட்பட்டே பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டிருப்பதால் முறைகேடு ஏதும் இல்லை என்று விளக்கமளித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 3 அரசு பி.எட். கல்லூரிகளில் போதிய பேராசிரியர்கள் இல்லாததால் அங்கீகாரத்தை ரத்து செய்வது குறித்து தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் நோட்டீஸ் அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது



Tags : B.Ed ,colleges ,professors , Government B.Ed. Colleges, Professors, College Websites
× RELATED புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு...