×

கூட்டு முயற்சியின் மூலம் மேக் இன் இந்தியா திட்டத்தை எளிதில் நிறைவேற்றலாம்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

புதுடெல்லி: கூட்டு முயற்சியின் மூலம் மேக் இன் இந்தியா திட்டத்தை எளிதில் நிறைவேற்றலாம் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். கூட்டு முயற்சியுடன் கூட்டுறவு முயற்சியும் சேர்ந்தால் இந்திய அளவில் மட்டுமல்லாது உலகளவில் தன்னிறைவு அடையலாம் என்றும் அவர் கூறியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள் , கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதன் விளைவாக பள்ளி , கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாக படங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் தேசிய மாணவர் படையினருக்கு பயிற்சி வழங்க செல்போன் செயலி ( Directorate General National Cadet Corps Mobile Training App ) ஓன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த செல்போன் செயலியை  மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தொடங்கிவைத்தார். டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் தேசிய மாணவர் படை வீரர்களிடம் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறுகையில், மாணவர்கள் அனைவரும் சிறந்த எதிர்காலத்தை அடைவதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறன். கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில் பாதுகாப்புப்படை வீரர்களின் பங்கு அளப்பறியது. கொரோனாவிற்கு எதிராக ஒரு லச்சத்திற்கும் அதிகமான தேசிய பாதுகாப்புப்படை வீரர்கள் களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றனர்.

தேசிய பாதுகாப்புப்படை வீரர்கள் நேரடியாக பயிற்சி பெறுவதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. கல்வி நிலையங்களும் தற்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை என்பதால், இணையம் மூலம் தேவையான பயிற்சிகளை அளிக்க செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் வீரர்களுக்கு தேவையான அனைத்து வகையான பயிற்சிகளும் வழங்கப்படும். உலக நாடுகளின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் தன்னம்பிக்கையை பெற வேண்டும். இதற்காக வெளிப்படையாக கொள்கையில் சில சீர்திருத்தங்களை கொண்டுவர வேண்டும். 101 வகையான பாதுகாப்பு பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என்பது சீர்திருத்தங்களில் ஒன்றாகவே கொண்டுவரப்பட்டது, என்று கூறியுள்ளார்.
 

Tags : Rajnath Singh Make ,India ,Rajnath Singh , Joint Venture, Make in India, Defense Minister Rajnath Singh
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...