×

எந்த விதத்திலும் தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லை என்ற நிலை கிடையாது.! நாகப்பட்டினத்தில் முதல்வர் பேச்சு

நாகை:  நாகப்பட்டினம் மாவட்டத்தில் புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். அதைதொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது என்று நாகை ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். பணிபுரிகின்ற இடங்களிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தியுள்ளார். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தொழிற்சாலைகள் அதிகமாக இயங்கி வருகிறது. தமிழகத்தில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த 7.5 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நாளொன்றுக்கு 70 ஆயிரம் பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன  என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் பேசினார். வீடு வீடாகச் சென்று காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன என்றும் வருவாய், காவல், உள்ளாட்சி துறைகள் இணைந்து கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை செய்கிறது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  நாகை மாவட்டத்தில் விரைவில் உணவு பூங்கா, ரெடிமேட் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4% ஆக உள்ள நிலையில் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி 8 ஆக உள்ளது என்று அவர் தெரிவித்தார். 


Tags : speech ,Tamil Nadu ,Nagapattinam ,Chief Minister , Tamil Nadu, Employment, Nagapattinam, Chief Minister
× RELATED பணி நிறைவுபெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா