×

கொரோனா தடுப்பு பணியில் ஊர்காவல் படையினரை ஈடுபடுத்த வேண்டாம்!: தமிழக காவல்துறை உத்தரவு

சென்னை: கொரோனா தடுப்பு பணிகளில் ஊர்காவல் படையினரை ஈடுபடுத்த வேண்டாம் என்று தமிழக காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பழைய முறை போல மாதம் 5 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு முதல் நாள் ஒன்றுக்கு 560 ரூபாய் என்ற ஊதியம் அடிப்படையில், ஊர்காவல் படையினர் மாதம் 5 நாட்கள் வேலை செய்து வந்தனர். மார்ச் மாதம் முதல் கொரோனா பணியில் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டதால் மாதம் முழுவதும் வேலை கிடைத்தது. முன்பு மாதம் 2,000 ரூபாய் மட்டுமே ஊதியமாக பெற்று வந்தவர்கள், கொரோனா பணிகளால் மாதம் 16,800 ரூபாய் ஊதியம் பெற்றனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளில் ஊர்காவல் படையினரை ஈடுபடுத்த வேண்டாம் என்று தமிழக காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

காவல்துறை இத்தகைய உத்தரவால் மீண்டும் 5 நாள் மட்டுமே பணிபுரியும் நிலை ஊர்க்காவல் படையினருக்கு ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே கடந்த மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களுக்கான ஊதியம் வழங்கப்படாத நிலையில், மீண்டும் 5 நாள் பணி வழங்கப்பட்டிருப்பதால் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். கொரோனா பேரிடர் தொடரும் நிலையில், தமிழக காவல் துறையின் இந்த உத்தரவால் சுமார் 15 ஆயிரம் பேரின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகி உள்ளது. எனவே தங்களுக்கு மாதம் முழுவதும் பணி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என ஊர்க்காவல் படையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Tamil Nadu Police ,Kayts , Corona, Kayts, Tamil Nadu Police
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...