×

ஈராக், சிரியாவில் 10,000க்கும் அதிகமான ஐஎஸ் தீவிரவாதிகள் செயல்பாட்டில் உள்ளதாக ஐ.நா அறிவிப்பு

பாக்தாத்: ஈராக் மற்றும் சிரியாவில் சுமார் 10,000க்கும் அதிகமான ஐஎஸ் தீவிரவாதிகள் செயல்பாட்டில் உள்ளனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூறும்போது, ஐஎஸ் தீவிரவாதிகள் தோற்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் சிரியா மற்றும் ஈராக்கில் சிறு குழுக்களாக இயங்க தொடங்கியுள்ளனர். சுமார் 10,000க்கும் அதிகமான தீவிரவாதிகள் இவ்விரு நாடுகளில் செயல்பட்டு வருகின்றனர்.

கொரோனா பரவலால் உலகமே முடங்கி இருக்கும் நேரத்தில் ஆள் சேர்ப்பது, நிதி திரட்டல் போன்ற நடவடிக்கைகளில் எப்படி அவர்கள் ஈடுபடுகிறார்கள் என்பது தெரியவில்லை. எனினும் ஐஎஸ் தீவிரவாதிகள் மீண்டும் தலையெடுக்க தொடங்கியுள்ளது அச்சுறுத்தல்தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளின் எழுச்சியால் பெரும் குழப்பம், அமைதியின்மை ஏற்பட்டது. இந்த நிலையில் ஈராக்கிலிருந்து 2014-ம் ஆண்டில் அமெரிக்கப் பாதுகாப்புப் படையினர் வாபஸ் பெற்றுக்கொண்டனர். அங்கு ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகமானது. இதையடுத்து ஐஎஸ் தீவிரவாதிகளை ஒடுக்க ஈராக் அரசு நடவடிக்கையில் ஈடுபட்டது.

இதனைத் தொடர்ந்து ஈராக் நாட்டுக்கு உட்பட்ட மொசூல் உள்ளிட்ட பகுதிகளைக் கைப்பற்றிய ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக உள்நாட்டுப் போர் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதில் 2017 ஆம் ஆண்டு போரில் வெற்றி பெற்றதாக ஈராக் அரசு அறிவித்தது. சிரியாவில் அதிபர் ஆசாத் அரசுப் படைகள் காரணமாக ஐஎஸ் படைகள் பெருமளவு தோற்கடிக்கப்பட்டது.



Tags : UN ,militants ,Syria ,Iraq ,ISIS , Iraq, Syria, ISIS
× RELATED கோரிக்கையை புறக்கணிக்கும் இஸ்ரேல்...