×

2022ம் ஆண்டு செப்டம்பருக்குள் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயம் : மத்திய சுகாதாரத்துறை!!

மதுரை : மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு டிசம்பரில் கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தென்காசி பாண்டியராஜா கேட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை இவ்வாறு பதில் அளித்துள்ளது. மதுரை தோப்பூரில் ரூ.1264 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 45 மாதங்களில் பணிகள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இதுவரை சுற்றுசுவர் பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன.

இந்த நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியராஜா எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை பதில் அளித்துள்ளது.அதில் ஜிகா என்ற ஜப்பான் நிறுவனத்துடன் எய்ம்ஸ் கட்டிடப்பணிக்கான கடன் ஒப்பந்தம் டிசம்பரில் கையெழுத்தாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2022ம் ஆண்டு செப்டம்பருக்குள் கட்டிட பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : construction ,Madurai ,Central Health Department ,AIIMS Hospital , Aims to complete construction of AIIMS Hospital at Toppur, Madurai by September 2022: Central Health Department !!
× RELATED கலசபாக்கம் அருகே கட்டுமான பொருள்...