×

அமெரிக்காவில் கருப்பினத்தவர் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு!: ஜப்பானின் பிரபல டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா போட்டிலிருந்து பாதியில் விலகல்..!!

சின்ஸ்: அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜேக்கப் பிளேக் சுடப்பட்டதை கண்டித்து ஜப்பானை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா போட்டி ஒன்றில் இருந்து பாதியில் விலகிக் கொண்டுள்ளார். அமெரிக்க ஓபன் டென்னிஸ்க்கு பயிற்சியாக கருதப்படும் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஜப்பானைச் சேர்ந்த நவோமி ஒசாகா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். அரையிறுதியில் ஒசாகா, எலிஸ் மெர்ட்டன்ஸ்-ஐ எதிர்கொள்கிறார். இந்த ஆட்டம் இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்நிலையில் கருப்பினத்தவரான ஜேக்கப் பிளேக் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அரையிறுதியில் இருந்து விலகுவதாக நவோமி ஒசாகா தெரிவித்துள்ளார்.

22 வயதான  நவோமி ஒசாகா, சின்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் வெஸ்டர்ன் அண்ட் சதர்ன் ஓப்பன் டென்னிஸ் போட்டியிலிருந்தே பாதியில் வெளியேறியுள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், தாம் ஒரு வீராங்கனை என்பதற்கு முன்னர், ஒரு கருப்பின பெண் என்று குறிப்பிட்டிருக்கிறார். அத்துடன் கருப்பினத்தவர் என்ற அடிப்படையில், இனவெறி சம்பவங்களை கண்டிப்பதாகவும், எனது ஆட்டத்தை ரசிக்கும் அனைவரும் இனவெறி தாக்குதல்களில் கவனம் செலுத்துமாறும் நவோமி ஒசாகா கேட்டுக் கொண்டுள்ளார். கால் இறுதி சுற்றில் எஸ்தோனியா வீராங்கனை அனட் கொற்றாவிட்ரய் 3 செட்களில் வீழ்த்தி ஒசாகா முன்னேறியிருந்தார். இந்த நிலையில் தான் ஜேக்கப் பிளேக் சுடப்பட்டதை கண்டித்து அரையிறுதி விளையாட்டில் கலந்துக் கொள்ளாமலேயே வெளியேறுவதாக அவர் கூறியுள்ளார். ஒசாகாவின் இத்தகைய முடிவு டென்னிஸ் அரங்கில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

Tags : attack ,blacks ,United States , Protest against the attack on black people in the United States!
× RELATED அமெரிக்காவில் ரோபோ நாய் அறிமுகம்…!!