×

தூத்துக்குடியில் ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாததால், கடனை அடைக்க முடியாத 2 பேர் தூக்கிட்டு தற்கொலை!!

தூத்துக்குடி:  ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாததால், கடனை அடைக்க முடியாத 2 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதுள்ள சூழலில் ஊரடங்கு காரணமாக வருமானம் இழந்த பலர் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாக விட்டன. அந்த வகையில் மேலும் 2 சம்பவம் நேர்ந்துள்ளது. அதாவது தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தை சேர்ந்த மாரிபாண்டியின் மனைவி ராமலட்சுமி என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மாரிபாண்டி-ராமலட்சமி என்ற தம்பதியினருக்கு ஒரு மகள் உள்ளார். அவருக்கு தற்போது திருமணம் செய்து விட்டதால், இவர்கள் தனியாக வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் மாரிபாண்டிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மனைவி ராமலட்சுமி சிலரிடம் கடன் பெற்று வைத்தியம் பார்த்துள்ளார். இதனையடுத்து வேலைக்கு சென்று ராமலட்சுமி கடனை அடைத்து வந்துள்ளார். இந்த நிலையில், தற்போது கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக வேலை இழந்த ராமலட்சுமி வருமானம் ஈட்ட முடியாமல் தவித்து வந்துள்ளார். இதனால் கடனை அடைக்க முடியாமல் தவித்த அவர், வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதேபோல் சென்னை அடுத்த போரூர் அருகே ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்த பழைய கார் வியாபாரி பாலாஜி, தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவர் தொழில் தொடர்பாக 10 லட்சம் ரூபாய் வரை நண்பர்களிடம் கடன் பெற்றுள்ளார். இதனை திருப்பி கொடுக்க முடியாமல் தவித்த அவர் தற்கொலை செய்துகொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுபோன்ற தற்கொலை சம்பவங்கள் மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : suicide ,Thoothukudi. , 2 people commit suicide by hanging due to lack of income due to curfew in Thoothukudi !!
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை