×

11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரம்!: அமைச்சர் பாண்டியராஜன், நடராஜனிடம் சபாநாயகர் விசாரணை..!!

சென்னை: 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் காணொலி காட்சி மூலம் விசாரணையை தொடங்கியுள்ளார். துணை முதலமைச்சராக உள்ள ஓ.பன்னீர்செல்வம், சோழன்வந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், பாண்டியராஜன், செம்மலை, சண்முகநாதன், நட்ராஜ், ஆறுக்குட்டி, சின்னராஜ், மனோரஞ்சிதம், சரவணன், அருண்குமார் மற்றும் மனோகரன் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் போது ஆட்சிக்கு எதிராக வாக்களித்தனர்.

தற்போது இரு அணிகளும் ஒன்றாக இணைந்ததற்கு பின்பாக எவ்விதமான நடவடிக்கையும் சபாநாயகர் மேற்கொள்ளாமல் இருப்பது ஒருதலைபட்சம் என்ற அடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் முடிவில் உச்சநீதிமன்றமானது இது தொடர்பான உரிய நடவடிக்கையை சபாநாயகர் மேற்கொள்ளலாம் என்று அறிவுறுத்தியிருந்தது.

 இதன் அடிப்படையில் 11 சட்டமன்ற உறுப்பினர்களுடன் சபாநாயகர் காணொலி காட்சி வாயிலாக இன்று விசாரணை மேற்கொண்டார். இன்றைய விசாரணையை பொறுத்தவரையில் 2 சட்டமன்ற உறுப்பினர்களிடம் மட்டும் தான் விசாரணை நடைபெற்று வருகிறது. மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய நடராஜ் மற்றும் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் பாண்டியராஜ் ஆகிய இருவரிடம் மட்டுமே விசாரணை நடைபெற்று வருகிறது.

ஒட்டுமொத்தமாக உள்ள துணை முதலமைச்சர் உள்பட 11 சட்டமன்ற உறுப்பினர்களில் இருவர் மட்டுமே இன்றைய விசாரணையில் பங்கேற்றுள்ளனர். சபாநாயகர் தனபால் அவரது இல்லத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாகவும், அதேபோல 2 சட்டமன்ற உறுப்பினர்களும் அவரவர் இல்லத்தில் இருந்து விசாரணையில் கலந்துகொண்டுள்ளனர்.

இன்றைய விசாரணைக்கு, புகார் அளித்த தினகரனுக்கு ஆதரவு அளித்ததன் காரணமாக, தகுதி நீக்கம் செய்யப்பட்ட, சோளிங்கர் எம்.எல்.ஏ., பார்த்திபனிடமும் விசாரணை நடைபெற்றது. வரக்கூடிய நாட்களில் மீதமுள்ள சட்டமன்ற உறுப்பினர்களிடம் சபாநாயகர் விசாரணை மேற்கொள்ளவுள்ளார். தொடர்ந்து எஞ்சியுள்ள சட்டமன்ற உறுப்பினர்களிடம் விசாரணை நடத்திய பிறகு இந்த விவகாரத்தில் சபாநாயகர் எடுக்கக்கூடிய முடிவே இறுதி முடிவாக இருக்கும்.

Tags : Pandiyarajan ,Disqualification ,Nadarajan ,Minister Pandiyarajan ,MLA ,Natraj ,Mylapore ,TN Assembly Speaker Starts Inquiry , Video Confrence, Pandiyarajan, MLA Natraj,TN Assembly Speaker,11 MLA Case
× RELATED தொடர்ந்து 8 மணி நேரம் டப்பிங் பேசினார் கவுண்டமணி