பக்தர்கள் வருவதை தடுக்க வேளாங்கண்ணி ஆலயத்தை சுற்றி 7 பாதைகள் அடைப்பு

நாகை: உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன்  தொடங்கி 10 நாட்கள் நடைபெறும். வெளியூர், வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்நிலையில் கொரோனா  தொற்று காரணமாக இந்த ஆண்டு பெருவிழாவிற்கு பக்தர்கள், பொதுமக்களுக்கு அனுமதி மறுத்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால்  மாவட்டத்தில் 21 இடங்களில் போலீசார் சோதனை சாவடிகளை அமைத்து வெளியூர்களில் இருந்து பக்தர்கள் வருவதை கண்காணித்து வருகின்றனர்.வெளியூர்களில் இருந்து பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் மீது வழக்குப்பதிவு செய்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைக்கின்றனர். இதையும் தாண்டி  பொதுமக்கள், பக்தர்கள் பேராலயம் வந்துவிடாமல் இருக்க பேராலயத்தை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பேராலயத்திற்கு வரும்  பாதைகளான மாத்தாங்காடு, கறிக்கடை முச்சந்தி, பேராலயம் நுழைவு வாயில், உத்திரியை மாதாகோயில் தெரு, அண்ணாபிள்ளை தெரு உள்ளிட்ட 7  இடங்களில் இரும்பு தடுப்புகளை வைத்து போலீசார் தடுத்துள்ளனர்.

வேளாங்கண்ணி பேராலயத்தை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் வீடுகளில் இருந்து வெளியில் செல்வதற்கு வசதியாக  எஞ்சியுள்ள 2 இடங்களை போலீசார் திறந்து வைத்துள்ளனர். பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசாரிடம் வேளாங்கண்ணி பேராலயத்தை சுற்றியுள்ள  பகுதியை சேர்ந்தவர்கள் என்பதற்கான ஆதார் அட்டை அல்லது ரேஷன்கார்டு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஏதாவது ஒன்றை காண்பித்து போலீசாரின்  அனுமதி பெற்ற பின்னரே செல்ல முடியும். போராலயத்தின் கொடியேற்று விழாவில் பங்கேற்க 30பாதிரியார்களுக்கு மட்டுமே அனுமதி  அளிக்கப்பட்டுள்ளது.

வேளாங்கண்ணி பேராலயத்தை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்தவர்கள் என்பதற்கான ஆதார் அட்டை அல்லது ரேஷன்கார்டு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஏதாவது ஒன்றை காண்பித்து போலீசாரின் அனுமதி பெற்ற பின்னரே செல்ல முடியும்.

Related Stories:

>