×

20 விசைப்படகுகள் கரை திரும்பின குளச்சலில் குவிந்த செம்மீன்கள்: வியாபாரிகள் போட்டிபோட்டு வாங்கி சென்றனர்

குளச்சல்: குளச்சலில் நேற்று 20  விசைப்படகுகள் கரை திரும்பின. இதில் ஏராளமான செம்மீன் கிடைத்தன.குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300 விசைப்படகுகள் மீன்  பிடித்தொழில் செய்து வருகின்றன.ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற  படகுகளில்  நேற்று 20 படகுகள் கரை திரும்பின.இவற்றில் செம்மீன்கள் (கிளி  மீன்கள்), கொழிசாளை,நாக்கண்டம் மீன்கள் ஏராளமாக கிடைத்தன.அவற்றை   மீனவர்கள் ஏலக்கூடத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்தனர்.

கிளி மீன்கள்  கிலோ  65 முதல் 75 வரை விலை போனது.நாக்கண்டம் கிலோ 35 முதல் 40 வரையும்,கொழிசாளை கிலோ 20 முதல் 22 வரையும் விலை  போனது. இம்மீன்களை வியாபாரிகள் போட்டிப்போட்டு ஏலம் கேட்டு  வாங்கி  சென்றனர். இதில் சிறிய ரக கிளிமீன்கள் பற்பசை தயாரிக்கும் கம்பெனிக்கு  ட்அனுப்பி வைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பெரிய ரக  கிளி  மீன்களும்,நாக்கண்டம்,கொழிசாளைமீன்கள் வெளியூர் மீன் சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

Tags : Shore ,Merchants Buy Competitively. ,Merchants Buy Competitively , 20 ,Key Boats ,Accumulated ,Puddles ,Competitively
× RELATED உடற்பயிற்சிக்கான தளம் அமைக்கும் பணி ஆய்வு