×

போலியோ இல்லாத நாடானது ஆப்பிரிக்கா: தற்போது இரண்டு நாடுகளில் மட்டுமே போலியோ உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல்

ஜெனீவா: போலியோவை ஏற்படுத்தும் வைரஸிலிருந்து ஆப்பிரிக்கா முற்றிலுமாக விடுபட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. போலியோ என்னும் இளம் பிள்ளை வாத நோய் காரணமாக உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர், கை, கால்கள் முடங்கி ஊனமுற்ற நிலை காணப்பட்டது. இந்த நோய் பாதிக்கப்படும் குழந்தைகள் வளர்ச்சி குறைவாகவும், பிற்காலங்களில் ஊனமுற்ற நிலைக்கும் தள்ளப்படுகின்றனர்.   இந்த நோய்த்தொற்று குறித்து 70 வருடத்திற்கு முன்பு 1950ம் ஆண்டு வாக்கில் கண்டறியப் பட்டு, அதற்கான தடுப்பு மருத்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் ஈடுபட்டு வெற்றி அடைந்தன. அதைத்தொடர்ந்து, இந்த நோய்க்கு தடுப்பூசி 1955ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.  போலியோ தடுப்பூசி மற்றும்  சொட்டு மருந்துகள் குழந்தைகளுக்கு வழங்கப்படுவதால், இந்த நோய் அடியோடு ஒழிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே இந்தியா உள்பட பல நாடுகளில், போலியோ நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஆப்பிரிக்கா நாடு போலியோ இல்லாத நாடாக உலக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று ஆப்பிரிக்காவின் வரலாற்றில் சிறப்புமிக்க நாள். கடந்த நான்கு ஆண்டுகளாக ஆப்பிரிக்காவில் போலியோ பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை. போலியோவிலிருந்து ஆப்பிரிக்கா முற்றிலுமாக விடுபட்டுள்ளது. ஆப்பிரிக்காவிலிருந்து முற்றிலும் அழிக்கப்பட்ட பெரியம்மையுடன் போலியோவும் தற்போது இணைகிறது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய இருநாடுகளில் மட்டுமே இன்னும் போலியோ பாதிப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டில் பாகிஸ்தானில் 128 பேருக்கும் ஆப்கானிஸ்தானில் 28 பேருக்கும் போலியோ வைரஸ் டைப் 1 இருப்பது தெரிய வந்திருக்கிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த இரண்டு நாடுகளில் இருந்தும் போலியோ ஒழிக்கப்படும் என்று நம்பலாம்.

Tags : Africa ,countries ,World Health Organization , Polio, Africa, World Health Organization
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்...