×

ஆப்கானிஸ்தானில் கடும் வெள்ளப்பெருக்கு..: சுமார் 100 பேர் பலி..நூற்றுக்கணக்கான வீடுகள் நீரில் அடித்துச் சென்றன!

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு வடக்கே ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கால் நூற்றுக்கணக்கான வீடுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதுடன், சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் அதிகாலை கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த கனமழையால் பர்வான், வார்டக் மாகாணங்களின் பல்வேறு பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  அதிகாலை என்பதால் மக்கள் தங்கள் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்தனர். வெள்ளத்தின் வேகம் அதிகமாக இருந்ததால் பல்வேறு வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. வெள்ளம் சேறும் சகதியுமான நீரை கொண்டுவந்ததால் பலர் மண்ணுக்குள் புதைந்தனர். பல வீடுகள் இடிந்து விழுந்தன.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தேசிய மீட்புக்குழுவினர் வெள்ளத்தில் சிக்கி மண்ணால் மூடப்பட்ட உடல்களை மீட்கும் பணிகளில் பாதுகாப்புப் படையினரும் பொதுமக்களும் ஈடுபட்டுவருகின்றனர். இதுவரையில் வெள்ளத்தில் சிக்கி சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆனால் வெள்ளம் காரணமாக பலர் மண்ணில் புதைந்திருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது. மேலும் எட்டு மாகாணங்களிலும் வெள்ளத்தால் பலத்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக ஆப்கனின் பேரிடர் பாதுகாப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் தேவையான மீட்பு மற்றும் உதவி நடவடிக்கைகள் மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரப் கான் தெரிவித்துள்ளார்.


Tags : Afghanistan ,hundreds ,places , Afghanistan, floods, casualties, Kabul
× RELATED இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி...