×

நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 57 பேர் பலியான சம்பவம் : குற்றவாளிக்கு பரோல் இல்லாத ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு!!

வெல்லிங்டன் : நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நியூசிலாந்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் குற்றவாளிக்கு தண்டனை காலம் முழுவதும் பரோல் வழங்கப்படாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

51 பேர் பலியான கோர சம்பவம்!!

நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள 2 மசூதிகளில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 15-ந்தேதி நடந்த துப்பாக்கி சூட்டில் 57 பேர் பலியாகினர். நாட்டையே உலுக்கிய இந்த கொடூர தாக்குதல் பயங்கரவாத தாக்குதல்தான் என்பதை அந்த நாட்டின் பிரதமர் ஜெசிந்தா உறுதி செய்தார். துப்பாக்கிச்சூடு நடத்தி, அந்த கொடூர காட்சிகளை பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பிய ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த பயங்கரவாதியான பிரெண்டன் டாரண்ட் (வயது 29) கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவர் மீது 51 கொலை, 40 கொலை முயற்சி மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. ஆரம்பத்தில் தன்மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்த பிரெண்டன் டாரண்ட் கடந்த மார்ச் மாதம் நடந்த விசாரணையின்போது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் அவரை குற்றவாளியாக நீதிபதிகள் அறிவித்தனர். கொரோனாவால் முடக்கப்பட்டுள்ள கோர்ட்டு இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர் அவருக்கான தண்டனை வழங்கும் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு!!

இந்த நிலையில் பிரெண்டன் டாரண்டுக்கு தண்டனை அறிவிப்பதற்கான வாதம் கிறைஸ்ட்சர்ச் நகர கோர்ட்டில் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது.  குற்றவாளிக்கு தண்டனைக்கான வாதத்தில், அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், குற்றவாளி பிரெண்டன் டாரண்ட், தாக்குதல் நடத்திய 2 மசூதிகளையும் தீ வைத்து கொளுத்தும் திட்டம் வைத்திருந்ததாகவும், 3-வது மசூதியில் துப்பாக்கிச்சூடு நடத்த முயன்றதாகவும் தெரிவித்தார்.மேலும் பிரெண்டன் டாரண்டுக்கு அதிகபட்ச தண்டனையாக பரோலில் வெளியே வர முடியாத வகையில் வாழ்நாள் சிறை விதிக்க வேண்டும் என அரசு வக்கீல் கோரினார்.

இதையடுத்து குற்றவாளியான பிரெண்டன் டாரண்டுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தண்டனை காலம் முழுவதும் பரோல் வழங்கப்படாது என்றும் தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.இது போன்ற தண்டனை நியூசிலாந்தில் வழங்கப்படுவது இது முதல் சந்தர்ப்பமாகும்.



Tags : mosque shooting ,New Zealand ,Convict , New Zealand, mosque, shooting, convict, parole, life sentence, verdict
× RELATED 2வது டெஸ்டில் போராடி வெற்றி நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா