×

ஆண்டர்சன் 600

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளிடையே சவுத்தாம்ப்டனில் நடந்த 3வது மற்றும் கடைசி டெஸ்ட் டிராவில் முடிந்தததை அடுத்து, இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. மழை காரணமாக பாதிக்கப்பட்ட 3வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 583 ரன் குவித்து டிக்ளேர் செய்த நிலையில் (கிராவ்லி 267, பட்லர் 152), பாகிஸ்தான் 273 ரன்னுக்கு சுருண்டது (கேப்டன் அசார் அலி 141, ரிஸ்வான் 53). பாலோ ஆன் பெற்று 2வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடிய அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 187 ரன் எடுத்த நிலையில் கடைசி நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. கிராவ்லி ஆட்ட நாயகன் விருது பெற்றார். பட்லர் மற்றும் ரிஸ்வான் தொடர் நாயகன் விருதை பகிர்ந்துகொண்டனர்.

கடைசி டெஸ்டின் முதல் இன்னிங்சில் 5 விக்கெட், 2வது இன்னிங்சில் 2 விக்கெட் வீழ்த்திய இங்கிலாந்து வேகம் ஜேம்ஸ் ஆண்டர்சன் (38 வயது), டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட் என்ற சாதனை மைல்கல்லை எட்டி அசத்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த சிகரத்தை அடைந்த முதல் வேகப் பந்துவீச்சாளர் என்ற பெருமை அவர் வசமானது. ஸ்பின்னர்கள் முரளிதரன் (800 விக்கெட், இலங்கை), ஷேன் வார்ன் (708, ஆஸி.), அனில் கும்ப்ளே (619, இந்தியா) ஆகியோருக்கு அடுத்த இடத்தை ஆண்டர்சன் பிடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்காக அவர் இதுவரை 156 டெஸ்டில் விளையாடி 600 விக்கெட் (சிறப்பு 7/42) வீழ்த்தி உள்ளார்.       


Tags : Anderson 600 , Anderson, 600
× RELATED தோல்வியை சந்தித்தது வருத்தம்...