வெஸ்டர்ன்,தர்ன் ஓபன் காலிறுதியில் ஜோகோவிச்

நியூயார்க்: அமெரிக்காவில் நடைபெறும் வெஸ்டர்ன் , சதர்ன் ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் கால் இறுதியில் விளையாட நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் தகுதி பெற்றார். கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் அமெரிக்காவின் டெனிஸ் சாண்ட்கிரெனுடன் நேற்று மோதிய ஜோகோவிச் (செர்பியா) 6-2, 6-4 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றார். மற்றொரு 3வது சுற்றில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் 7-6 (7-2), 7-6 (7-4) என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ஜான் ஐஸ்னரை கடுமையாகப் போராடி வீழ்த்தினார். மர்ரே வெளியேற்றம்: இங்கிலாந்து வீரர் ஆண்டி மர்ரே தனது 3வது சுற்றில் 2-6, 2-6 என்ற நேர் செட்களில் கனடாவின் மிலோஸ் ரயோனிக்கிடம் தோற்று வெளியேறினார். ரஷ்யாவின் டானில் மெட்வதேவ் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் அல்ஜாஸ் பெடினை (ஸ்லோவகியா) வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.

Related Stories:

>