தமிழக உயரதிகாரிகள் திடீர் டெல்லி பயணம்

சென்னை: தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம், தமிழக உள்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், முதலமைச்சரின் செயலாளர் செந்தில்குமார், தமிழக போலீஸ் டிஜிபி திரிபாதி ஆகியோர் நேற்று மாலை சென்னையில் இருந்து விமானத்தில் டெல்லி சென்றனர். இ-பாஸ் ரத்தாகுமா?: தமிழக அரசு தலைமை செயலாளர் சண்முகம். நேற்று இரவு 7 மணி விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார். அதற்காக மாலை 6 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தார்.நிருபர்கள் டெல்லி பயணம் பற்றி கேட்டதற்கு, டெல்லியில் நாளை (இன்று) நடக்க இருக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள செல்கிறேன் என்றார். தமிழ்நாட்டில் இ பாஸ் ரத்து சம்பந்தமாக கேட்டதற்கு அவர் எந்த பதிலும் அளிக்காமல் சென்று விட்டார். முன்னதாக மாலை 5.05 மணி விமானத்தில் தமிழக உள்துறை செயலாளர் பிரபாகர், தமிழக முதலமைச்சரின் செயலாளர் செந்தில்குமார், தமிழக போலீஸ் டிஜிபி திரிபாதி ஆகியோர் டெல்லி சென்றனர்.

Related Stories:

>