×

ரவுடி என்கவுன்டர் விவகாரத்தில் 4 போலீசார் டிரான்ஸ்பர்

சென்னை: பிரபல ரவுடி சங்கரை அயனாவரம் இன்ஸ்பெக்டர் நட்ராஜ் மற்றும் போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு என்கவுண்டர் செய்தனர். இந்நிலையில், சங்கர் மரணத்தில் மர்மம் உள்ளதாகவும் போலீசார் வேண்டும் என்றே சங்கரை கொன்று விட்டதாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதனால் இரண்டு நாட்களாக உடலை வாங்க மறுத்து தலைமறைவாகினர். இதனால் இந்த விஷயத்தில் பரபரப்பு நிலவியது. அதன் பிறகு போலீஸ் உயரதிகாரிகள் சமாதானம் செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் சங்கரின் உடலைப் பெற்றுக்கொண்ட உறவினர்கள் ஓட்டேரியில் சங்கரின் உடலை அடக்கம் செய்தனர்.

இதனையடுத்து, சங்கர் என்கவுன்டர் செய்யப்பட்ட சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் நட்ராஜ் உடனிருந்த 4 போலீசாரை கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் பணியிட மாற்றம் செய்து நேற்று உத்தரவை பிறப்பித்தார். அதன்படி ஜெயப்பிரகாஷ் சேத்துப்பட்டு குற்ற பிரிவிற்கும் வடிவேல் கீழ்ப்பாக்கம் சட்டம்-ஒழுங்கு பிரிவிற்கும் ரமேஷ்பாபு டிபி சத்திரம் குற்றப்பிரிவுக்கும்.  காயமடைந்த முபாரக் வேப்பேரி குற்றப் பிரிவிற்கும் மாற்றப்பட்டுள்ளனர். சங்கரின் உறவினர்களால் குற்றம்சாட்டப்பட்ட அயனாவரம் இன்ஸ்பெக்டர் நட்ராஜ் விரைவில் மாற்றப்படுவார் என காவல்துறை வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Tags : affair ,Police Transfer ,Rowdy Encounter ,policemen , Rowdy Encounter, affair, 4 cops, trans
× RELATED அண்ணா பல்கலை விவகாரம் திமுக இளைஞரணி, மாணவரணி ஆர்ப்பாட்டம்