அதிகரிக்கும் கொரோனா தொற்று பணியிடத்தில் கண்காணிப்பு குழு தேவை: ஐசிஎம்ஆர் விஞ்ஞானி தகவல்

சென்னை: பணியிடங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பதை தடுக்க கொரோனா காண்காணிப்பு குழுவை அமைக்க வேண்டும் என்று ஐசிஎம்ஆர் விஞ்ஞானி பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுவருகிறது. மேலும் பல்வேறு வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் செயல்பட தொடங்கியுள்ளன. எனவே பணியிடங்களில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐசிஎம்ஆர் விஞ்ஞானி பிரதீவ் கவுர் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடரபாக அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவு:

கடந்த மாதம் முதல் பணியிடங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. எனவே பணியிடங்களை பாதுகாப்பாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை செய்ய வேண்டும். பணியிடங்களில் பணிபுரியும் அனைவரும் மாஸ்க் அணிவதை உறுதி செய்ய வேண்டும். தனி மனித இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். பணியிடத்தின் பல்வேறு இடங்களில் கிருமிநாசினி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒரே நேரத்தில் அதிகம் பேர் உணவு அருந்தும் இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும்.

ஒவ்வொரு பணியிடத்திலும் நிறுவன கொரோனா கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். அறிகுறி உள்ளவர்களை உடனே கண்டறியும் வகையிலும், அவர்கள் பணியிடத்திற்கு வராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதிக பாதிப்பு உள்ளவர்களை சோதனைக்கு உட்படுத்த வேண்டும். உள் அரங்க கூட்டங்களை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் அதிகம் பேர் உணவு அருந்தும் இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு பணியிடத்திலும் நிறுவன கொரோனா கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்.

Related Stories:

>