×

தனியார் மருத்துவமனையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

தாம்பரம்: கொரோனா வைரஸ் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைபெற அரசு மருத்துவமனைகள் தவிர சில தனியார் மருத்துவமனைகளுக்கும் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட புகார்கள் எழுந்து வருவதால் அரசு அதிகாரிகள் அவ்வப்போது தனியார் மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை தொடர்பாக பல்வேறு புகார்கள் தொடர்ந்து எழுந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, நேற்று செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கொரோனா தொடர்பான புகார்கள் ஏதாவது மருத்துவமனைக்கு வரப்பட்டு உள்ளதா? மருத்துவமனையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு படுக்கை வசதிகள்முறையாக செய்யப்பட்டுள்ளதா? மருத்துவமனை முழுவதும் சுகாதாரமாக பராமரிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்தார்.இதில், சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஜீவா, தாம்பரம் நகராட்சி ஆணையர் சித்ரா,  தாம்பரம் காவல் கூடுதல் துணை ஆணையர் அசோகன்ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags : inspection ,hospital , Private hospital, authorities, study
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...