×

எஸ்.பி.பி நுரையீரல் செயல்பாடு முன்னேற்றம்: எஸ்.பி.பி.சரண் வீடியோ

சென்னை: கொரோனா தொற்று காரணமாக சென்னை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் நேற்று வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது:
எஸ்.பி.பிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களை நேற்று சந்தித்தேன். 2 நாட்களுக்கு முன்பிருந்ததை விட நன்கு தேறி வருவதாகவும், நுரையீரல் செயல்பாட்டில் முன்னேற்றம் இருப்பதாகவும் சொன்னார்கள். இன்னும் சில நாட்களில் என் தந்தை மீண்டு வருவார் என்று நம்புகிறேன். பிறகு அவரை சந்தித்தேன். ஏதோ சொல்லவும், எழுதிக் காட்டவும் முயற்சித்தார். அவரால் பேனா பிடிக்க முடியவில்லை. அவருக்கு தினமும் நாளிதழ் செய்திகளை படித்து சொல்லும்படி மருத்துவர்களிடம் கோரிக்கை வைத்தேன். உங்களுக்கு செய்திகள் கேட்பது பரவாயில்லையா என்று கேட்டபோது, சரி என்று என் தந்தை தலையாட்டினார். இசை கேட்டு, அதற்கேற்ப விரல்களை அசைக்கிறார். பாட முயற்சிக்கிறார். இதெல்லாம் அவர் மீண்டு வருகிறார் என்பதற்கான அறிகுறிகள்.

Tags : SBP, Lung Function, Progress, SBP Surrender Video
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...