×

மரக்கன்றுகள் நடும் விழா

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படை சார்பில், நடுவக்கரை கிராமத்தில் 1000 மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. கல்பாக்கம் மத்திய தொழில் பாதுகாப்பு படை சீனியர் கமாண்டன்ட் சி.சி.ஆர்.குமார் குப்தா, செங்கை கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.ஆறுமுகம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டு, மரக்கன்றுகளை நட்டு, மரம் வளர்ப்பதன் அவசியம் மற்றும் பயன்கள் குறித்து பேசினர். சிஐஎஸ்எப் உதவி கமாண்டன்ட்டுகள் வெங்கடராஜி, பி.எஸ்.மேத்தா, இன்ஸ்பெக்டர் ஆர்.கே.சர்மா, திருக்கழுக்குன்றம் துணை வட்டாட்சியர் கார்த்திக் ரகுநாத், வட்டார வளர்ச்சி அலுவலர் உமா உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிஐஎஸ்எப் பாஸ்கர், ஜெயந்தி ஜெகன் ஆகியோர் செய்தனர்.

Tags : Sapling planting ceremony , Saplings, planting, ceremony
× RELATED துப்பாக்கி சுடும் தளத்தில் மரக்கன்று நடும் விழா