×

10ம் முறையாக கொரோனா நிதி பணத்தின் மீது ஆசையில்லை: யாசகர் ‘நறுக்’ பேட்டி

மதுரை: தூத்துக்குடி மாவட்டம், ஆலங்கிணற்றை சேர்ந்தவர் பூல்பாண்டி (70), யாசகர். கடந்த ஏப்ரல் மாதம் மதுரை வந்தார். கொரோனா ஊரடங்கால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதையடுத்து மதுரையில் தங்கி, பிச்சை எடுத்து வருகிறார். கொரோனாவால் மக்கள் பாதிக்கப்படுவதை உணர்ந்து, இவர் பிச்சையெடுத்த பணத்தை ரூ.10 ஆயிரத்தை கடந்த மே மாதம் நிதியுதவியாக மதுரை கலெக்டரிடம் வழங்கினார். தொடர்ந்து, மொத்தம் 9 முறை தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.90 ஆயிரத்தை கொேரானா நிதியாக கலெக்டரிடம் வழங்கினார்.

பிச்சை எடுத்து, அந்தப்பணத்தை கொேரானாவுக்காக வழங்கிய பூல்பாண்டியின் சேவையை பாராட்டி, அவரை கவுரவிக்கும் வகையில், அவருக்கு சிறந்த சமூக சேவகருக்கான விருதை கலெக்டர் வினய் வழங்கினார். இந்த நிலையில், நேற்று 10வது முறையாக ரூ.10 ஆயிரத்தை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜிடம் வழங்கினார். இதனால் அவர் கொரோனா நிதியாக ரூ.ஒரு லட்சம் கொடுத்துள்ளார். இது குறித்து பூல்பாண்டி கூறுகையில்,‘‘தனக்கு யாசகம் மட்டுமே கேட்க தெரியும், கொடுக்க தெரியாது என்பதால், ஏழைகளுக்கு உதவிகள் சென்றடைய வேண்டும் என்பதால், அரசிடம் கொரோனா நிதி வழங்கி வருகிறேன். தனக்கு பணத்தின் மீது ஆசை இல்லாத காரணத்தால், தான் பெற்ற யாசக பணத்தை உதவிக்காக வழங்குகிறேன்,’’என்றார்.



Tags : Corona ,interview ,Yasagar , 10th time Corona , no desire, financial money, Yasagar ‘chop’ interview
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...