×

தேவதானப்பட்டி பகுதியில் மழையின்மையால் பசுந்தீவன தட்டுப்பாடு: கால்நடை வளர்ப்போர் அவதி

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி பகுதியில் போதிய மழையின்மையால் பசுந்தீவன தட்டுப்பாடு, கொரோனாவால் பால் கொள்முதலை குறைத்த அரசு  மற்றும் தனியார் நிறுவனங்கள், பிண்ணாக்கு, தவிடு ஆகியவற்றின் விலையேற்றம் ஆகிய காரணங்களால் கால்நடை வளர்ப்போர் அவதிப்படுகின்றனர். தேவதானப்பட்டி பகுதியில் கிடை மாடுகள், வண்டி மாடுகள், கறவை மாடுகள், வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் என லட்சக்கணக்கில் கால்நடைகளை  வளர்த்து வருகின்றனர். இப்பகுதியில் போதிய மழையின்மையால் நிலத்தடி நீர் குறைந்து நிலங்கள் வறண்டு கிடக்கின்றன. இதனால், பசுந்தீவனத்  தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆடு, மாடு வளர்ப்போர் அவதிப்படுகின்றனர். மேலும், கொரோனா ஊரடங்கால் அரசு மற்றும் தனியார்  நிறுவனங்கள் பால் கொள்முதலை குறைத்துள்ளன. மேலும், கொள்முதல் செய்யும் பாலுக்கு விலையை குறைத்துக் கொடுக்கின்றனர்.

இது ஒருபுறம்  இருக்க கறவை மாடுகளுக்கு வைக்கப்படும் பிண்ணாக்கு, தவிடு ஆகியவற்றின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால், கறவை மாடு வளர்ப்போர்  அவதிப்படுகின்றனர். தீவனத் தட்டுப்பாடும், கால்நடை வளர்ப்போருக்கு கொரோனாவால் பொருளாதார பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. எனவே,  கால்நடைத்துறை சார்பில் வைக்கோல் கொள்முதல் செய்து, மானிய விலையில் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : area ,Devadanapatti ,Livestock breeders ,Livestock farmers , Lack ,lack ,Devadanapatti , Livestock ,farmers ,suffer
× RELATED விவசாயிகளுக்கு பயிற்சி