×

36 மணிநேரத்தில் கட்டப்பட்ட பாலத்திற்கு 4 மாதமாகியும் சாலை அமைக்காத ரயில்வே நிர்வாகம்: பொதுமக்கள் அவதி

பள்ளிபாளையம்:பள்ளிபாளையத்தில் 36 மணிநேரத்தில் அமைக்கப்பட்ட ரயில் பாலத்திற்கு நான்கு மாதங்களாகியும் சாலை அமைக்கப்படாததால்,  பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.பள்ளிபாளையம் பயணியர் மாளிகை முன்புள்ள பழைய ரயில்பாலம் மே 4ம் தேதி காலை 8 மணிக்கு அகற்றப்பட்டு 5ம் தேதி மாலை 5 மணிக்கு  புதிய பாலம் கட்டி முடிக்கப்பட்டது. 36 மணி நேரத்தில் அமைக்கப்பட்ட இந்த பாலம் தென்னக ரயில்வேயில் அரிய சாதனையாக கருதப்பட்டு பலரின்  பாராட்டுதலையும் பெற்றது. பாலப்பணிகள் முடிந்ததும், அதற்கான சாலை அமைக்காமல் 4 மாதங்களாக ரயில்வே நிர்வாகம் மெத்தனம் காட்டி  வருவது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

சமீபத்தில் பெய்த மழையால் பாலத்தின் அடியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பாலத்தை சுற்றிலும் கற்களும், குழாய்களும் அகற்றப்படாமல் கிடக்கிறது.  பாலத்தின் தண்ணீர் வெளியேறும் கால்வாய் பணிகள் முடிக்கப்படாமல் தூர்ந்து போய் கிடக்கிறது. மின்துறை அமைச்சரின் முகாம் அலுவலகமாக  விளங்கும் பயணியர் மாளிகை முன்பே திட்டப்பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது, ரயில்வே நிர்வாகத்தின் மெத்தனத்தை காட்டுகிறது. சாதனை  செய்வதற்காக மட்டும் பணிகளை செய்யாமல் சேவையை கருத்தில் கொண்டு சாலைகளை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.



Tags : Railway administration ,suffering , Railway ,administration ,36 hours, suffering
× RELATED காத்திருப்போர் பட்டியலில் ரத்தான...