×

கும்பகோணத்தில் ஊரடங்கால் வருமானத்தை இழந்த குடும்பம் : மனைவியை கொன்று கணவன் தற்கொலை

கும்பகோணம்: கொரோனா ஊரடங்கு காரணமாக போதிய வருமானம் இல்லாததால், மனைவியை கொன்றுவிட்டு கணவன் மண்ணெணெய்யை ஊற்றி கொண்டு தற்கொலை செய்து கொண்டது கும்பகோணத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணத்தில் மருந்துக்கடை ஒன்றில் தொழிலாளியாக பணியாற்றி வந்த விஜயன் என்பவருக்கு ஊரடங்கால் போதிய வருமானம் இல்லை.

இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்றிரவு தகராறு முற்றியதால், குழவிகல்லால் மனைவியை அடித்து கொன்ற விஜயன், வீட்டிற்கு வெளியே வந்து மண்ணெணெய்யை ஊற்றி தற்கொலை செய்துகொண்டார். ஊரடங்கு காரணமாக போதிய வருமானம் இல்லாததால், ஒரு குடும்பமே சிதைந்துவிட்டதாக அக்கம் பக்கத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சடலங்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் கரூர் அருகே அருகம்பாளையத்தில் சுவாச பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த தாயும், வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த மகனும் தற்கொலை செய்து கொண்டனர். ஊரடங்கு காரணமாக மருத்துவ செலவிற்கு போதிய பணம் இல்லாததால், அவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags : Kumbakonam ,suicide ,A Family , kumbakonam,lockdown , corona pandemic,suicide
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...