×

வங்கக்கடலில் உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!!: ஒடிசா உள்ளிட்ட 6 மாநிலங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!!

சென்னை : வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தமிழகத்திற்கு மழை வாய்ப்பு மிகக் குறைவு என்றும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடக்கு, வடமேற்கில் நகர்ந்து ஒடிசா, மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்கண்ட், சத்தீஸ்கர், வடக்கு மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வரும் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.   

இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக வெப்ப சலனத்தால் மழை பெய்கிறது. தமிழகத்தில் நிலவும் வெப்பம் காரணமாக வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.இதில் கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சிராப்பள்ளி, சேலம், நீலகிரி, மதுரை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகள் அடங்கும். ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி பதிவாகும்.

மழை நிலவரம்:

* கயத்தாறு (தூத்துக்குடி) - 7 செ.மீ
* வானமாதேவி (கடலூர்) - 5 செ.மீ
* சோழவந்தான் (மதுரை), வாடிப்பட்டி (மதுரை), ஆண்டிபட்டி (மதுரை), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு),  - 4 செ.மீ

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : states ,Bay of Bengal ,Odisha , Bay of Bengal, formed, deep depression, Odisha, heavy rain, chance
× RELATED மீன்பிடி தடைக்காலம் எதிரொலி...