ஊரடங்கால் வேலை இழப்பு பேக்கரி ஊழியர் தற்கொலை

ஆவடி: பட்டாபிராம் அண்ணா நகர் சர்ச் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (45). பேக்கரி ஊழியர். இவரது மனைவி பத்மா (36). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன. ஊரடங்கால் கடந்த 5 மாதமாக விஜயகுமாருக்கு வேலை இல்லை. இதனால் அவர் குடும்பத்தை நடத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தார். தற்போது ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பித்து விட்டதால் குழந்தைகளுக்கும் கல்வி கட்டணம் கட்ட முடியாமல் தவித்து வந்தார். இதனால், மனமுடைந்த விஜயகுமார் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து பட்டாபிராம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.    

Related Stories:

>