×

லடாக் மலைப் பகுதிகளில் சிறிய ரக ஏவுகணைகளை வீசும் புதிய படைப்பிரிவு: சீன விமானங்களை வீழ்த்த அதிரடி

புதுடெல்லி: சீன போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களின் அத்துமீறலை முறியடிக்க, லடாக் எல்லை மலைப் பகுதிகளில் சிறிய ரக ஏவுகணைகளை செலுத்தும் ராணுவப் பிரிவு புதிதாக நிறுத்தப்பட்டுள்ளது. கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் 15ம் தேதி சீனப் படையினர் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணமடைந்தனர். இந்திய ராணுவத்தினரின் பதிலடி தாக்குதலில் 45 சீன ராணுவர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்துக்கு பிறகு, கிழக்கு லடாக் பகுதியில் சீனா 50,000 படையினரை குவித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் குறிப்பாக லடாக், அருணாச்சல் பகுதிகளில் வீரர்களை குவித்து வருகிறது. மேலும்,  பீரங்கிகள், சிறிய ரக ஏவுகணைகள், போர் விமானங்களையும் நிறுத்தியுள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கிழக்கு லடாக் எல்லை கட்டுப்பாட்டு பகுதிக்குட்பட்ட, இந்திய வான்வெளியில் சீனாவின் ஹெலிகாப்டர் அத்துமீறி ஊடுருவ முயன்றது.

ஆனால், சீனாவின் இந்த முயற்சி இந்திய ராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது. இருப்பினும், சீன போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களின் அத்துமீறலை முறியடிக்க, கிழக்கு லடாக் பகுதிக்குட்பட்ட 14வது கண்காணிப்பு நிலை, கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளில் குறிப்பாக மலைப் பகுதிகளில் தோளின் மீது வைத்து ஏவுகணைகளை செலுத்துவதில் நிபுணத்துவம் பெற்ற தனிப்படை பிரிவு புதிதாக நிறுத்தப்பட்டுள்ளது. இவர்கள், ரஷ்யாவிடம் இருந்து கொள்முதல் செய்ய்யப்பட்டுள்ள, ‘இக்லா’ ரக ஏவுகணைகளை பயன்படுத்த உள்ளனர். அதோடு, இந்திய விமானப்படையும் சுகோய்-30 எம்கேஐ. ரக ஹெலிகாப்டர்களையும் ராணுவம் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தி உள்ளது.


Tags : mountains ,battalion ,Chinese ,Ladakh , Ladakh Mountains, Small Missile, Blowing, New Regiment, Chinese Aircraft, Shoot Action
× RELATED சென்னை பட்டாளத்தில் பெயிண்ட் கடையில்...