×

படிக்க சென்ற இடத்தில் காதல் வலையில் வீழ்த்தினர் லண்டனில் படித்த சென்னை மாணவியை வங்கதேசத்துக்கு கடத்தி சென்று சித்ரவதை

சென்னை: லண்டனில் மேற்படிப்புக்கு சென்ற சென்னை மாணவியை சர்வதேச கடத்தல் கும்பல் காதல் வலையில் வீழத்தி  கடத்தியுள்ளது. இது குறித்து வங்கதேச முன்னாள் எம்பி மகன் மீது என்ஐஏ வழக்கு பதிவு செய்துள்ளது. இதில், இந்திய மதபோதகருக்கும் தொடர்பு இருப்பது அம்பலமாகி உள்ளது. வடசென்னையை சேர்ந்த இளம்பெண் ரிச்சா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவருடைய பெற்றோர் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள். பல ஆண்டுகளுக்கு முன்பே சென்னையில் குடியேறினர். இவருடைய தந்தை பல்வேறு தொழில்கள் செய்து செல்வ செழிப்பாக வாழ்கின்றனர். இதனால். ரிச்சாவும் ஆடம்பரமாக வாழ்ந்தார்.

இந்நிலையில், பெற்றோரிடம் அடம் பிடித்து லண்டனில் உள்ள பிரபல பல்கலைக் கழகத்தில் மேற்படிப்பு படிக்க சென்றார். அங்கு சென்ற சில மாதங்கள் வரை பெற்றோருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்தார். பின்னர், திடீரென அவருடன் தொடர்பு கிடைக்கவில்லை. சென்னையில் இருந்து பெற்றோர் பல வகையில், பலமுறை முயற்சி செய்தும் ரிச்சாவுடன் பேச முடியவில்லை. பீதி அடைந்த அவர்கள், மத்திய உள்துறை அமைச்சகத்தில் புகார் அளித்தனர். இது பற்றி விசாரணை நடத்தும்படி என்ஐஏ.வுக்கு உத்தரவிடப்பட்டது. அதில், ரிச்சாவை லண்டனில் காதல்வலையில் வீழத்திய சர்வதேச கடத்தல் கும்பல், அங்கிருந்து வங்கதேசத்துக்கு  கடத்தி விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.

ரிச்சா, தற்போது வங்கதேச முன்னாள் எம்பி ஒருவரின் மகனான நபீஸ் என்பவர் கட்டுப்பாட்டில் இருக்கிறார். அவரை கடத்திய கும்பல், நபீஸ்க்கு விற்றுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த மதபோதகர் ஜாகீர் நாயக்குடன்  நபீசுக்கு  தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் என்ஐஏ வழக்கு பதிவு செய்துள்ளது. கடந்த மே 28ம் தேதி என்ஐஏ இந்த வழக்கை சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றியது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் இந்த வழக்கை விரைந்து முடிக்கும்படி என்ஐஏவை கேட்டுக்கொண்டது. அதைத் தொடர்ந்து அவர்கள், மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட வழக்கை மீண்டும் திரும்பப் பெற்றுக் கொண்டனர்.

இதையடுத்து, சர்வதேச இளம்பெண்கள் கடத்தல் கும்பலுடன் நபீசுக்க உள்ள தொடர்பு குறித்தும், அவனது கூட்டாளிகள் குறித்தும் என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது. அதில், மாணவியை கடத்திய கும்பலுக்கும், மத போதகர் ஜாகீர் நாயக்கிற்கும் உள்ள தொடர்பு குறித்து முழுமையாக தெரியவரும் என்று என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத போதகர் ஜாகிர் நாயக் ஏற்கனவே பல வழக்குகளில் என்ஐஏவால் தேடப்பட்டு வருபவர். அவர் தற்போது, மலேசியாவில் தஞ்சம் புகுந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

* பல கோடி கேட்டு மிரட்டல்
ரிச்சாவை கடத்திய சர்வதேச கும்பல், அவரை தங்களுடைய மதத்திற்கும் மாற்றி உள்ளனர். மாணவியை விடுவிக்க ேகாரி பெற்றோர் அணுகிய  போது, அவரை விடுவிக்க பல கோடி ரூபாய் பணம் பிணையத் தொகையாக கேட்டும் அந்த கும்பல் மிரட்டியுள்ளது.


Tags : student ,Bangladesh ,London ,Chennai , Love web, educated in London, Chennai student, kidnapped, tortured in Bangladesh
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...