×

அரசு பேருந்துகளை இயக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை: போக்குவரத்துக் கழகத்தில் செயல்படும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், பாதுகாப்பு வசதிகளுடன் அனைத்து பேருந்துகளையும் இயக்க வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. போக்குவரத்துக் கழகத்தில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதையடுத்து தொழிற்சங்கம் அரசுக்கு இடையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.  

நோய் தொற்றை பயன்படுத்தி திட்டமிட்டு போக்குவரத்துக் கழகங்களை முடக்கும் நோக்கத்துடன் தமிழ்நாடு அரசு செயல்படுகிறது. எனவே தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அனைத்து பேருந்துகளையும் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள பணிமனைகள் தோறும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. அதன் ஒருபகுதியாக சென்னை, பல்லவன் இல்லத்தில் உள்ள பணிமனை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் தொமுச பேரவை நடராஜன், சிஐடியு ஆறுமுக நயினார் உள்ளிட்டோர் தலைமை வகித்தனர்.


Tags : Demonstrations ,Tamil Nadu ,government , Government bus, urging to run, across Tamil Nadu, protest
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...