×

கொரோனா நோய் தொற்று காலத்தில் 88 ஆயிரம் யூனிட் ரத்தம் கிடைத்தது: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை: கொரோனா நோய் தொற்று காலத்தில் 805 ரத்ததான முகாம் மூலம் 88 ஆயிரம் யூனிட் ரத்தம் பெறப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் பெரும்பலான மருத்துவமனைகள் கொரோனா சிறப்பு மருத்துவமனைகளாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று அல்லாத பிற நோயாளிகளுக்கு எந்த வித தடையின்றி சிகிச்சை அளிக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மார்ச் 2020 முதல் இதுவரை 20,550 நபர்களுக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டுள்ளது. இதில் 1,077 நபர்கள் கோவிட் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள். 1,347 நபர்களுக்கு ஆஞ்சியோகிராம் மற்றும் 439 நபர்களுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 4,154 கர்ப்பிணி தாய்மார்களும் 37,436 குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 805 ரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டு 88,280 யூனிட் ரத்தம் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு சிறப்பு சிகிச்சைகள் மற்றும் மருத்துவ சேவைகள் தொய்வு இல்லாமல் நடைபெற்றது. கொரோனா தொற்றினால் தனியார் மருத்துவமனைகளை நோயாளிகள் அணுக இயலாத நிலையில் கூடுதல் சேவைகளையும் அரசு மருத்துவமனைகள் திறம்பட எதிர்கொண்டு அரசு மருத்துவமனைகளில் சேவைகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : units ,Vijayabaskar ,Minister ,corona epidemic , Corona disease, period, 88 thousand units, blood was found, Minister Vijayabaskar informed
× RELATED டெல்லி முதல்வர் அரவிந்த்...